naathamnews.com

உலகத்தமிழர்களை ஒருங்கிணைத்த உலகளாவிய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டம் !!

உலகத்தமிழர்களை ஒருங்கிணைத்த உலகளாவிய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டம் !!
mai 19
14:47 2020

உலகத்தமிழர்களை ஒருங்கிணைத்த வகையில் முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலையின் 11வது ஆண்டு தமிழீழத் தேசிய துக்க நாள் கூட்டம் இணைவழியே உலகத்தமிழர் முள்ளிவாய்கால் நினைவேந்தல் கூட்டடமாக சிறப்பாக இடம்பெற்றுள்ளது. கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பல்வேறு கெடுபிடிகளுக்கு  நடுவேற தமிழர் தாயகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றிருக்க, உலகத்தமிழர்கள் உள்ளுணர்வோடு கூடியிருந்தனர்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது தமிழீழத்; தேசிய துக்க நாள் உரையுடன் தொடங்கியிருந்த இப்பெருநிகழ்வில் அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, தென்னாபிரிக்கா, இந்தியா, சுவிஸ், ஜேர்மனி, பிரான்ஸ் என உலகப்பரப்பெங்கும் இருந்து பெருமக்கள் கலந்து கொண்டிருந்தனர்.


தமிழர் தேசம் சிங்கள இனவாதகட்டமைப்பினால் ஆக்கிரிமிக்கப்பட்ட ஓர் தேசம் என்பதனை தாயக தமிழ்அரசியல் தலைவர்கள் கூட்டாக பிரகடனப்படுத்த வேண்டும் என்பதோடு, சிறிலங்காவின் இனநாயக அரசினால் தமிழர்களுக்கு ஒரு போதும் அரசியல் தீர்வு கிடைக்காது என்பதனை தாயக தமிழ்தலைவர் சர்வதேசத்துக்கு இடித்துரைக்க வேண்டும் என அறைகூவல் விடுத்திருந்த பிரதமர் வி.உருத்திரகுமாரன், இலங்கைத்தீவில் நிலைமாறுகால நீதி தோற்றுப்போன நிலையில், சர்வதேச சமூகம் சிறிலங்கா தொடர்பில் புதிய அணுகுமுறையினை கையாளவேண்டும் எனவும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தனது தமிழீத் தேசிய துக்க நாள் உரையில் தெரிவித்திருந்தார்.
உலகத்தமிழர்களின் இந்தப் பெரும்கூட்டத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அந்நாடுகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரதிநிதிகள் என்;று பலரும் பங்கெடுத்து ஈழத்தமிழர்களின் நீதியின் தேடலுக்கு தமது தோழமையினை தெரிவிருந்தனர்.

கனடா :   Hon Gary Anandasangaree, (MP Scarborough-Rouge Park ),Hon  Patrick Brown (Mayor of Brampton) ,Hon  Neethan Shan ( Executive Director, Urban Alliance,) Mayor John Tory (Ontario) , Dr Anu Sriskandarajah ,  Hom  MPP Logan Kanapathi (Provincial Parliament of Ontario), Hon MP Shaun Chen (Scarborough North )  
பிரித்தானியா :  Hon. Elliot Colburn (Conservative Member of Parliament for Carshalton & Wallington, All Party Parliamentary Group for Tamils) , Hon Siobhain Mcdonagh MP (Mitcham and Morden), Hon Gareth Thomas Mp(Harrow), Hon  Edward Davey (Kingston and Surbiton Acting leader of Liberal Democrats), Hon Graham Willianson (UK – Nation without States) , 

சுவிஸ் :  Hon Anna Annor (Humain Rights Activist, Eelam council président)  

பிரான்ஸ் :    Hon Francois puponi (Député )  , Hon Clementine Autin   (Deputé) ,  Mme Marie-George Buffet  (Député) , Mr Georges Mothron (Maire d’ Argenteuil -95)


இந்தியா : நாம் தமிழர் கட்சித் தலைவர் செந்தமிழன் சீமான், நாடாளுமன்ற உறுப்பினர். மதிமுக பொதுச்செயலர் திரு.வைகோ,  K.K.S.M. Dhehlan Baqavi (SDPI), தோழர் தியாகு (பொதுச்செயலாளர் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் , எழுத்தாளர் பாமரன்,

இப்பெருமக்களுடன் பாலா மாஸ்ரர் (பொருளியில் ஆய்வாளர்) , முள்ளிவாய்க்கால் சாட்சியமாக மருத்துவர் வண்ணன் , இளங்கீரன் (காவல்துறை ஆய்வாளர்), ரவி சுப்ரமணியம் (அமெரிக்கா – உலகத்தமிழர் இயக்கம், சசி (ஜேர்மனி) தாயக நண்பர்கள் வட்டம், சுந்தரவேல் (தமிழர் புனவர்வாழ்வுக் கழகம் – பிரான்ஸ்), இரவிக்குமார் (பிரித்தானிய தமிழர் பேரவை), சிவருசி. தர்மலிங்கம் சசிக்குமார் (சைவநெறிக்கூடம்  – இணைப்பாளர் சுவிஸ்), காந்தா படையாச்சி ( தென்னாபிரிக்கா), உட்பட இவர்களுடன் கலைஞர்கள் பிரான்சில் இருந்து இந்திரன், பிறின்சி, கவிஞர் ராஜி பாற்றர்சன் ஆகியோர் பங்கெடுத்திருந்தனர்.

எமது மக்கள் போரே வாழ்வாகவும், வாழ்வே போராகவும் கொண்டு வாழ்ந்து வந்தவர்கள். பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்ட போதும் விடுதலைப் பயணத்தினைத் தமது தோளேந்தி நின்றவர்கள். முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் பின்னரும் சிங்களத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிராக உரிமைக்குரல் எழுப்பி வருபவர்கள்.  முள்ளிவாய்க்கால நினைவுடன் மே 18இனை, தேசிய துக்க நாளாக அனுட்டிப்பது எமது தேசிய  உயிர்ப்புணர்வை வலுப்படுதும் செயன்முறையாக இருக்கிறது. இதனால்  கொரோனா வைரஸ் பெருந்தொற்;றினால் ஏற்பட்டுள்ள இன்றைய இந்த நெருக்கடியினை நாம் எதிர்கொண்டவாறு, துயர்தோய்ந்த, அவலம் நிரம்பிய முள்ளிவாய்க்கால் கூட்டுநினைவுகளை நமது வீடுகளில் இருந்தவாறு உலகத்தமிழர்கள் நாம் ஒருமிக்க  வலுமிக்க சக்தியென்ற உள்ளுணர்வோடு இணைவழியாhக நினைவேந்தியிருந்தோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment