naathamnews.com

உலகபேராளர்கள் பங்கெடுக்கும் உலகளாவிய முள்ளிவாய்க்கால் இணையவழி நினைவேந்தல் கூட்டம் !!

உலகபேராளர்கள் பங்கெடுக்கும் உலகளாவிய முள்ளிவாய்க்கால் இணையவழி நினைவேந்தல் கூட்டம் !!
mai 17
09:13 2020

உலகளாவியரீதியில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பொதுநிகழ்வுகளை முன்னெடுப்பதற்கு பெரும் சவாலாக மாறியுள்ள நிலையில், முள்ளிவாய்க்காலின் 11வது ஆண்டு நினைவேந்தல் கூட்டமொன்று உலகளாவியரீயில் இணையவழியாக இடம்பெற இருக்கின்றது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஒருங்கு செய்யப்பட்டுள்ள இந்த பெருநிகழ்வில் கனடிய நாடாளுமன்ற உறுப்பினர்   Gary Anandasangaree, Member of Parliament Scarborough-Rouge Park , Patrick Brown- Mayor of Brampton , Neethan Shan ( Executive Director, Urban Alliance, Mayor john Tory ( Ontario), பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் Siobhain Mcdonagh MP (Mitcham and Morden), Gareth Thomas Mp(Harrow) Edward Davey (Kingston and Surbiton
Acting leader of Liberal Democrats),Graham Willianson (UK – Nation with out States), பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் Francois puponi , Clementine Autin  இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலைச்சிறுத்தை கட்சி தலைவருமாகிய தொல்.திருமாவளவன், Sdpi கட்சி தெக்லான் பார்கவி, தமிழர் தேசிய இயக்கம் தோழர் தியாகு; மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் பேரா.இராமசாமி அவர்கள் உட்பட   பெருமக்கள் பலர் பங்கெடுத்துக் கொள்கின்றனர்.  


அமெரிக்கா, கனடா, பிரத்தானியா, பிரான்ஸ்,ஜேர்மனி, தென்னாபிரிக்கா, உலகெங்கும் இருந்தும் தமிழர் அமைப்புக்கள் உட்பட 25க்கும் மேற்பட்ட பெருமக்கள் கலந்து கொள்கின்ற இணையவழி நிகழ்வாக இது ஏற்பாடாகியுள்ளது.


மே18ம் நாள் திங்கட்கிழமை  நேரம் (US) New York : 8:00am / UK 1:00 pm / Europe  2:00pm / Sri lanka – India 5:30pm   தொடங்குகின்ற இந்நிகழ்வினை உலகத்தமிழர்கள் அனைவரும் இந்த இணையதளம் http://tgte.tv/ , சமூகவலைத்தளம் https://www.facebook.com/tgteofficial மூலமும், தமிழ் ஊடகப்பரப்பிலும் காணலாம் என அறிவிக்கப்பட்டள்ளது.


எமது மக்கள் போரே வாழ்வாகவும், வாழ்வே போராகவும் கொண்டு வாழ்ந்து வந்தவர்கள். பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்ட போதும் விடுதலைப் பயணத்தினைத் தமது தோளேந்தி நின்றவர்கள். முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் பின்னரும் சிங்களத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிராக உரிமைக்குரல் எழுப்பி வருபவர்கள்.  முள்ளிவாய்க்கால நினைவுடன் மே 18இனை, தேசிய துக்க நாளாக அனுட்டிப்பது எமது தேசிய  உயிர்ப்புணர்வை வலுப்படுதும் செயன்முறையாக இருக்கிறது. இதனால்  கொரோனா வைரஸ் பெருந்தொற்;றினால் ஏற்பட்டுள்ள இன்றைய இந்த நெருக்கடியினை நாம் எதிர்கொண்டவாறு, துயர்தோய்ந்த, அவலம் நிரம்பிய முள்ளிவாய்க்கால் கூட்டுநினைவுகளை நமது வீடுகளில் இருந்தவாறு இணைவழியாhக நினைவேந்துவோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

– இந்நாளில் வேலைத்தளங்களுக்கோ, அத்தியாவசிய தேவைகளுக்கோ வெளியில் செல்பவர்கள் கறுப்புப்பட்டியணிந்து சென்று எமது மக்கள் பட்ட துயரினை உலகுக்கு வெளிப்படுத்துவோம்.– ‘இன்னுமொரு முள்ளிவாய்காலை நடக்கவிடமாட்டோம்’ என்ற உறுதியினை எமது அடுத்த சந்ததிகளின் மனங்களில் நிறைய வைக்க, முள்ளிவாய்க்கால் மக்களின் அவலத்தினை நினைவிற் கொள்ளும் ‘முள்ளிவாய்க்கால் கஞ்சியினை’ குடும்பமாக உண்போம். இம் «முள்ளிவாயக்கால் கஞ்சி» என்பது எமது மக்கள் பட்ட துயரினை நாம் உள்ளுணர்ந்து அன்றை தினம் எமது விடுகளில் நாம் தயாரித்து உணவாக உட்கொள்ளும் கஞ்சியினைக் குறிக்கும். யூதர்கள் தமக்கென்று ஓர் தேசம் உருவாகிய பின்னரும், கஞ்சி குடித்து தமதினத்தின்; அவலத்தை நினைவு கொள்வதுபோல், முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்ட கஞ்சிக்கொட்டில்கள் குண்டுமழைக்கும் மத்தியிலும் மக்களின் பசிதீர்த்தது போல் நாமும் முள்ளவாயக்கால் இனவழிப்பு நினைவுநாளில் கஞ்சி உண்டு எமது மக்களின் முள்ளிவாய்க்கால் இனவழிப்புக்கால வாழ்வியலை காலாதி காலம் நினைவிற் கொள்ளவோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மக்களுக்கு அறைகூவல் விடுத்திருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment