naathamnews.com

நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான செயல்முனைப்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !

நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான செயல்முனைப்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !
mars 08
22:47 2020

தமிழீழ விடுதலைப் புலிகளினால் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டு, தமது போராட்டத்தை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எனும் ஜனநாயக வடிவில் முன்னெடுக்கப் போவதாக அறிவிக்கப்பட்டு பத்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

இலங்கைத்தீவின் இறுதிப்போரின் போது, மே 18 2009ம் ஆண்டில் தமது ஆயுதங்களை மௌனிப்பதாக அறிவித்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகள்,  சரியாக ஒரு மாத காலத்தில், யுன் 2019 நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை அறிவித்திருந்தனர்.

தமிழர் தேசத்தில் நிறுவப்பட்டிருந்த நடைமுறைத் தமிழீழ அரசினை பெரும் இனஅழிப்பொன்றின் ஊடாக அழித்து, தமிழர் தேசத்தை ஆக்கிரமிப்புச் செய்த சிங்கள அரசு, தமிழர்களின் சுதந்திர வேட்கையினை இல்லாது செய்துவிடலாம் என நினைத்திருந்தது. தமிழர் தரப்பு அடுத்து என்ன செய்யப் போகின்றது என்ற எதிர்பார்ப்பும் அனைத்துலக சமூகத்திடம் காணப்பட்டிருந்தது.

இந்தவேளையில் யுன் 2009ம் ஆண்டில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எனும் ஜனநாயக போராட்ட வடிவத்தினை அறிவித்திருந்ததோடு, அரசாங்கத்தினை உருவாக்குவதற்கான மதியுரைஞர் குழுவினையும் நிறுவினர்.

இம்முயற்சியானது ஜனநாயக விழுமியங்களுக்கு அமைய, சுயாதீனமான முறையில் சுதந்திரமாக முன்னெடுக்கப்பட்டிருந்தது. அரசாங்கம் வடிவம் பெறுவதற்கான செயல்வழிப்பாதையினை வகுத்த மதியுரைஞர் குழுவானது, மக்கள் கருத்தறியும் கூட்டங்களையும், தேர்தல் ஆணையத்தினையும் நிறுவி, புலம்பெயர் தேசங்களில் தேர்தலை நடத்தியிருந்தது.

தமிழர்களை போரில் வென்றுவிட்டதாக சிங்கள் பௌத்த பேரினவாதம் தென்னிலங்கையில் தனது போர் வெற்றியினைக் கொண்டாடிக் கொண்டிருந்த வேளை, 18 மே 2010 நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாது அரசவை தமிழீழத் தேசியக் கொடி பட்டொளி வீச அமெரிக்காவில் கூடியிருந்தது.
இந்த பத்து ஆண்டுகளில் பல்வேறு சவால்களைக் கடந்து தனது மூன்றாவது தவணைக் காலத்தில் காலடி வைத்துள்ளது.

நடைபெற்ற இனஅழிப்படுகொலைக்கான ஈடுசெய்நீதி, அரசியற் தீர்வை நோக்கிய பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம், தேச கட்டுமானம், பொறுப்புக்கூறலுக்கான பன்னாட்டு நீதி (பாதிகிக்கப்பட்டவர்கள் முன்னெடுக்கும்), இந்தோ-பசுபிக் புவிசார் அரசியலில் ஈழத்தமிழர்களின் நலன்களை வென்றைடைய தமிழர்களை ஒரு தரப்பாக கொண்டுவருதல் என தனது மூலோபாயங்களை வகுத்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், ஒரு தேசிய இயக்கமாக உருப்பெற்றுள்ளது.

– மே 18, 2010 :  நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் / TGTE . ( www.tgte.org)பெரும் இனஅழிப்பொன்றின் ஊடாக தமிழர் தேசத்தை சிங்களம் ஆக்கிரமிப்புச் செய்து வெற்றிமுழக்கமிட்ட அதே நாளில், ‘நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்’ என, எமது விடுதலை நெருப்பை புதியதொரு அரசியல் வடிவத்தில் அனைத்துலக அரங்கில் அணையாது ஏற்றினோம்.
– மே 18, 2011 : தமிழீழ தேசிய துக்க நாளாக மே18 பிரகடனம் செய்யப்பட்டது. 
முள்ளிவாய்க்கால் தமிழர் வரலாற்றில் ஒரு முக்கியமான ஒரு கூட்டு நினைவு ஆகும். யூதர்கள்மேல் நாசிகளால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு எவ்வாறு யூத மக்களிடையே ஒரு வரலாற்றுக் கூட்டு நினைவாக அமைந்ததோ அதேபோல தமிழர்களுக்கு, ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகில் வாழும் அனைத்துத் தமிழர்களுக்கும் முள்ளிவாய்க்கால் ஒரு முக்கியமான கூட்டுநினைவாக அமைகிறது. தமிழருக்கு எதிரான இனப்படுகொலையின் ஓர் இரத்த சாட்சியமாக இருக்கிறது.

– மே 18, 2013 டிசெம்பர் 14 : –    International Protection Mechanism / தமிழர்களுக்கான பாதுகாப்பு பொறிமுறை:
தமிழர் தேசம் சிங்கள அரச கட்டமைப்பினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு வாழும் தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு பொறுப்பளிக்கக் கூடிய அனைத்துலக பாதுகாப்பு பொறிமுறை ஒன்றினை வலியுறுத்தும் தீர்மானம் ஒன்று அரசவையில் நிறைவேற்றப்பட்டிருந்ததோடு, அனைத்துலக சமூகம் நோக்கி அமெரிக்காவின் பவ்லோ நகரில் இடம்பெற்றிருந்த அரசவைக் கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. 

– மே 18, 2012 : தமிழீழ தேசிய அட்டை.தமிழர்கள் ஓரு தேசிய இனம் என்பதனை அடையாளப்படும் வகையில் இது அறிமுகப்படுத்தப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றது.
– மே 18, 2013 : தமிழீழ சுதந்திர சாசனம் முரசறைவு. தமிழீழத் தாயக மக்கள் மக்கள் உட்பட 1 இலட்சத்துக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்மக்கள் பங்கெடுத்த ஓர் பிரகடனமாக அமைந்திருந்தது.
நாளைய தமிழீழம் எத்தகைய கொள்கைகளை கொண்டிருக்கும் என்பதனை வெளிப்படுத்தும் வகையில 21 நிலைப்பாடுகளையும், வெளியுறவு, பொருண்மியம், மொழி, கல்வி, மருத்துவ மற்றும் உடல் நலம், மேம்பாட்டுக் கொள்கை, குடியுரிகை ஆகியனவற்றின் கொள்கைகளையும் இது உள்ளடக்கியிருந்தது.
– மே 17 2014  : SAY NO TO SRI LANKA   சிறிலங்காவை புறக்கணிப்பு செயல்முனைப்பு.
 அனைத்துலக அரங்கில் சிறிலங்காவை தனிமைப்படுத்தவும், அதன் பொருளாதாரத்தில் கணிசமான அளவு பாதிப்பினை ஏற்படுத்தவும் கூடியதானசிறிலங்கா புறக்கணிப்பு செயல்முனைப்பு மாநாடு லண்டனில் இடம்பெற்றிருந்தது.

– மே 18, 2014 : Dirty dozen  சிறிலங்காவின் இனப்படுகொலையாளிகள் பட்டியல் வெளியீடு
புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக சிறிலங்கா அரசு வெளியிட்டிருந்த தடைப்பட்டியலுக்கு பதிலடியாக, சிறிலங்காவின் தமிழினஅழிப்பாளர்களின் 12 பேருடைய விபரங்களின் முதற்தொகுதி வெளியிடப்பட்டது.

பயணத்தடை, சொத்துமுடக்கம், அனைத்துலக குற்றவியில் நீதிமன்றம் நோக்கிய செயல்முனைப்பு நோக்கி இப்பட்டியல் வெளியிடப்பட்டது. 
– யூலை 15  2014  Evidence Collection Project  / சாட்சியங்களை திரட்டுதலும் ஆவணப்படுத்தலும் .போரில் நடந்தேறிய பாரிய மனித உரிமைகள், சர்வதேச சட்டமீறல்கள் தொடர்பிலான விசாரணை ஒன்று, ஐ நா மனித உரிமை  ஆணையாளர் அலுவலகத்தினால் (OISL- OHCHR Investigation on Sri Lanka ) 30 ஒக்ரோபர் 2014  வரைக்கும்  நடைபெற்றது. 21 பெப்ரவரி 2001 இருந்து 15 நவம்பர் 2011  வரைக்கும் (LLRC period) பாதிப்புக்குள்ளானவர்களும், இந்த காலப்பகுதியோடு ஒட்டிய சம்பவங்களோடு தொடர்புடைய முந்திய அல்லது  பிந்திய காலச் சம்பவங்களையும் பதிவு செய்ய முடியும். ஐ.நாவின் இச்செயற்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்கப்பட்டது.

– மே 18, 2015 : Mullivaikal Memorial Lecture  முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரை. தமிழினப்படுகொலையினை நினைவேந்துகின்ற வகையில் உலகின் முக்கிய ஆளுமைகளை அழைத்து, அவர்களின் நோக்கு நிலையில் இருந்து முள்ளிவாய்கால் இனப்படுகொலைக்கான நீதிகோரும் நினைவுப் பேருரையாக இவ்வாண்டு முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
2015ம் ஆண்டு நினைவுப் பேருரையினைஅமெரிக்காவின் முன்னாள் சட்டமா அதிபர்  ராம்சே கிளர்க் ஆவார் வழங்கியிருந்தார்.
– மார்ச்15 2015 :  March 15 2015 Million Signature Campaign  – மில்லியன் கையெழுத்துப் போராட்டம் . (www.tgte-icc.org)சிறிலங்காவை அனைத்துலக குற்றிவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு, ஐ.நாவைக் கோரும் மில்லியன் கையெழுத்து போராட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.1.6 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் பங்கெடுத்துள்ளனர்.
– செப்ரெம்பர் 1 2015 :  Monitoring Accountability Panel (MAP) சிறிலங்காவின் நீதிப்பொறியமைவுகளை கண்காணிக்கும் சர்வதேச நிபுணர் குழு : (http://war-victims-map.org/)ஐ.நாவுக்கு சிறிலங்கா வழங்கிய உறுதிப்பாடுகளையும், அதன் நடப்பாடுகளையும் கண்காணித்து அறிக்கையிடுவதோடு, அதனை ஐ.நாவுக்கும் சர்வதேச சமூகத்துக்கு சமர்பிக்கின்ற வகையில் சர்வதேச நிபுணர்களைக் கொண்ட  Monitoring Accountability Panel (MAP)  எனும் குழு நியமனம் செய்யப்பட்டது.
– மே 18, 2016 : ஒவ்வோர் உயிருக்கும் ஒவ்வொரு மரக்கன்று .ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 30 வது கூட்டத்தொடர் தொடங்கியிருந்த 2015 செப்டம்பர் 14ம் நாளன்று தொடங்கிய இம் மரநடுகை இயக்கம், முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 7வது ஆண்டு நினைவுநாளாகிய 2016 மே 18 தமிழீழத் தேசிய துக்க நாளனன்று நிறைவுற்றது.

– ஒக்ரோபர்  2017 : சீனாவின் 99ஆண்டு அம்பாந்தோட்ட குத்தகை தொடர்பான அனைத்துலகச் சட்டம், இறைமை நிலைப்பாடுகள் தொடர்பில் ஆய்வறிக்கை புறுக்கசல்சில் உள்ள கடல்சார் சட்டநிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டமை.– டிசம்பர் 8 2017 : சிறிலங்காவின் ஆறாம் திருத்தச் சட்டத்திற்கு எதிரான சட்டப்போராட்டம்.
 சிறிலங்க அரசமைப்புச் சட்டத்துக்கான ஆறாம் திருத்தம் சுதந்திர அரசு வேண்டுமென அமைதியான முறையில் எடுத்துரைப்பதையே குற்றச் செயலாக்குகிறது என்றும், இது குடியியல், அரசியல் உரிமைகள் பற்றிய அனைத்துலக உடன்படிக்கையில் உறுதியளிக்கப்பெறும் மனசாட்சிச் சுதந்திரத்தையும் பேச்சுரிமையையும் மீறுவதாகும் என்பதனைச் சுட்டிக்காட்டி ஆயிரத்துக்கு எழுநூற்றி ஐந்து சட்டத்தரணிகள் ஒன்றிணைவில் ஐ.நாவில் முறையீடு செய்யப்பட்டது.
–  Nation  Building – Massive Action Plan  தேசத்தை கட்டியெழுப்புவதற்கான பெரும் பணித்திட்டம் .எமது எதிர்கால தேசத்தை கட்டியெழுப்பும் நோக்கில், தூர நோக்கு சிந்தனையுடன் இனங்காணப்பட்ட 15 பெரும் பணித்திட்டம் வரையப்பட்டது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம் தேச கட்டுமானம் தொடர்பில் முன்னர் வெளியிட்டிருந்த பெரும் பணித்திட்டத்தின் காலஓட்ட தொடர்சியாக இது வரையப்பட்டது.

– Continuous attendance in UN HRC sessions /international lobbying ஐ.நாவை நோக்கிய உள்யேயும் வெளியேயுமான தொடர் செயற்பாடுகள்.
ஐ நா மனித உரிமைச் சபையின் கூட்டங்களில் பங்குபற்றி தமிழ் மக்களுக்கு எதிராக நிறைவேறிய நிகழ்வுகள் மற்றும் சமகால நிலமைகள் ஆகியவனவற்றைப் பற்றி பங்கு பற்றும் சர்வதேசத் தூதுவர்களுக்கு எடுத்துக் கூறுதல். மற்றும்   சர்வதேச மட்டங்களில் பரப்புரை செய்தல்.
– Universal Jurisdiction Dossiers Report : தமிழ் மக்களுக்கு எதிராக நிறைவேறிய போர்க்குற்றங்கள், மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை சம்பந்தமான சாட்சியங்களை  ஆவணப்படுத்துவதற்காக  சர்வதேச  நிபுணர்களைக் கொண்ட சட்ட நிறுவனத்தை நியமித்துள்ளது. இது தமிழ் மக்களின் விடுதலையை நோக்கிய பயணத்திற்கு ஒரு சாட்சி ஆவணமாக  ( Reference material ) பாவிக்கப்டும்.
– மே 18 2018 :  You are not forgotten” / உங்களை நாங்கள் மறவோம். சிறிலங்காவில் காணாமல் ஆக்கப்ட்டோருக்கான ‘உங்களை  நாங்கள்  மறந்து விடவில்லை’ இயக்கம் www.youarenotforgotten.org    தொடங்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள் நேரடியாக தமது உறவுகள் பற்றிய விபரங்களை தரவேற்றம் செய்து கொள்ள முடியும் என்பதோடு, இது ஒரு ஆவணமாகவும் இந்த இணையம் அமைகின்றது.  
ஜனவரி 1 2018 : “Yes to Referendum” / பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம்.‘தமிழர் தலைவிதி தமிழரின் கையில்’ என்ற உயர்ந்த நோக்கத்துடன் பொது வாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. 
நாடுகடந்த தமிழீழ அராங்கம் தோற்றம் பெற்ற நாள் முதல் அதன் ஒவ்வொரு கட்டங்களிலும், தமிழர்களின் அரசியற் தீர்வுக்கான சிறந்ததொரு பொறிமுறையாக பொதுவாக்கெடுப்பினை வலியுறுத்தி வந்துள்ளது.
இக்காலத்தில் குர்திஸ்தானிலும், கத்தலோனியாவிலும் இடம்பெற்றிருந்த பொதுவாக்கெடுப்பு புத்துணர்வையும் நம்பிக்கையினையையும் தந்திருந்த நிலையில், இச்செயற்பாடு இயக்கமாக தோற்றம் பெற்றது.
இது தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் உள்ள ஈழத்தமிழ் மக்களிடத்தில், அவர்களே தமது அரசியற் தலைவிதியைத் தீர்மானிக்கும் வகையில் பொதுவாக்கெடுப்பு ஒன்று நடாத்தப்பட வேண்டும் என கோரிக்கையுடன் தனது செயற்பாட்டை இந்த இயக்கம் கொண்டுள்ளது.  கனடா, அமெரிக்கா, ஐரோப்பிய  நாடுகளில் மக்கள் அரங்கங்களை  நடாத்தி வருகிறது. இந்த பொறிமுறைக் கூடாக பல நாடுகள் விடுதலை அடைந்துள்ளன  என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு நீதிக்கும் இறைமைக்குமான எமது செயல்முனைப்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உள்ளது.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment