naathamnews.com

 Breaking News

தமிழர் வீடெங்கும் தமிழீழ சுதந்திர சாசனம் ! ஆவணம் வெளியிடப்பட்டது !

தமிழர் வீடெங்கும் தமிழீழ சுதந்திர சாசனம் ! ஆவணம் வெளியிடப்பட்டது !
novembre 29
13:49 2019

அனைத்துலக சமூகத்திற்கு தமிழீழ தேசத்தின் நிலைப்பாடுகளை வெளிப்படுத்தும் வகையில் 2013ம் ஆண்டு முரசறையப்பட்ட தமிழீழ சுதந்திர சாசன வரலாற்று ஆவணம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் வெளியீட்டு வைக்கபட்டது.

வெளியுறவு ,பொருண்மியம், மொழி, கல்வி, மருத்துவம் – உடல்நலன்சார், மேம்பாடு, சுற்றுபுறச்சூழல், குடியுரிமை உட்பட தமிழீழ தேசத்தின் 21 கொள்கை நிலைப்பாட்டினை வெளிப்படுத்தும் வகையில் இந்த ஆவணம் உள்ளடக்கியுள்ளது.

கொள்கை வரைவுக்கென கல்வியாளர்கள், அரசறிவியலாளர்கள் என வளப்பெருமக்களிடம் இருந்து பெறப்பட்டு விவாதிக்கப்பட்ட 20க்கும் ஆய்வுகள், தமிழீழ சுதந்திர சாசன வரைவு ஆகியனற்றை உள்ளடக்கியதாக புத்தகமாக ஒரு ஆவணம் வெளியிடப்பட்டது.

இதேவேளை தமிழர் வீட்டு வரவேற்பறைகளில் தொங்கவிடப்படும் வகையில் தமிழீழ சுதந்திர சாசன நினைவுப்பட்டயமும் வெளியிடப்பட்டது.

சுவிசில் நடைபெற்று வரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வில் இது வெளியிடப்பட்டது.
தமிழீழத்தை வென்றெடுப்பதற்கான அனைத்துலக உறவுகளை வென்றெடுப்பதற்கு அடிப்படையாக அமையக்கூடிய ஆவணமாக இந்த தமிழீழ சுதந்திர சாசனம் அமையும். தமிழீழம் எத்தகைய நிலைப்பாடுகளைக் கொண்டிருக்கப் போகிறது? எத்தகைய கொள்கைகiளைக் கடைப்பிடிக்கப் போகிறது? போன்றவற்றை நாம் இந்த சுதந்திர சாசனம் மூலம் கோடிட்டுக் காட்டியுள்ளோம். உதாரணமாக தமிழீழத்தின் வெளியுறவுக் கொள்கை ஜனநாயக நாடுகளுடன் கூடுதல் நட்புறவைக் கொண்டதாக அமையும் என்பதனையும் இந்தியாவினை தமிழீழம் நட்பு நாடாகக் கொள்ளும் எனவும் தமிழீழ சுதந்திர சாசனம் முரசறைந்துள்ளது. இது போன்று நிலைப்பாடு, கொள்கை சார்ந்து பல்வேறு விடயங்களை தமிழீழ சுதந்திர சாசனம் தெளிவுபடுத்தயுள்ளது. இதனால் ஒரு தொலைநோக்குடன் தமிழீழத்துக்கான ஆதரவை வென்றெடுப்பதற்கான செயற்பாடுகளை மேற்கொள்வதங்கு தமிழீழ சுதந்திர சாசனம் துணைசெய்யும். அரசுகளின் ஆதரவினை வென்றெடுப்பதற்கு முதற்படியாக பல்வேறு நாடுகளிலும் வாழும் குடியியில் சமூகத்தின், அறிவியல் சமூகத்தின் ஆதரவினை நாம் தமிழீழத்துக்கு வென்றெடுப்பதில் தமிழீழ சுதந்திர சாசனம் காத்திரமான பங்கை வழங்கும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

DCIM100GOPROGOPR0121.JPG