naathamnews.com

 Breaking News
  • எம் .ஏ.சுமந்திரனின் கருத்துக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் பதில் ! ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்கள் ஒன்றாக வாழ் விரும்புகின்றார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனின் கருத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர் பதிலுரைத்துள்ளார். இது தொடர்பில் தனது ருவிற்றர் பக்கத்தில் பதிலுரைக்கையில், எம்.ஏ. சுமந்திரன் கூறிய கூற்று...
  • இனப்படுகொலையை தடுப்பதற்கும், தண்டிப்பதற்குமான அனைத்துலக பிரகடனமும் தமிழர்களுக்கான நீதியும் ! இனப்படுகொலையை தடுப்பதற்கும், தண்டிப்பதற்குமான அனைத்துலக உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ள நாடுகள், சிறிலங்காவை அனைத்துலக குற்றவியில் நீதிமன்றத்தில் நிறுத்தி, தமிழினப்படுகொலைகக்கு நீதியினை நிலைநாட்ட பாடுபட வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். இனப்படுகொலையை தடுப்பதற்கும், தண்டிப்பதற்குமான ஐ.நா உடன்படிக்கையின் 71வது...
  • தமிழர்களை ஒரு தரப்பாக முனையும் வெளிவிவகாரக் கொள்கை இலங்கைத்தீவினை மையப்படுத்திய இந்தோ-பசுபிக் புவிசார்,பூகோள அரசியலில், தமிழர்களை ஒரு தரப்பாக்க கொண்டு நலன்களை அடைவதற்கான வெளிவிவகாரக் கொள்கை ஒன்றை வரைவதற்கான முனைப்புடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு நிறைவு கண்டுள்ளது. சுவிசில் மூன்று நாட்களாக இடம்பெற்ற இந்த நேரடி அமர்வின்...
  • மாவீரர்களின் இலட்சியக் கனவோடு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு தொடங்கியது ! தாயகம், தேசியம், அரசியல் இறையாண்மை என ஈழத்தமிழ் மக்களின் அரசியல் பெருவிருப்பின் ஜனநாயக வடிவமாக திகழும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரவை அமர்வு சுவிஸ்லாந்து நாட்டில் கூடியது. நொவெம்பர் 29,30, டிசெம்பர் 1ம் திகிதி வரை இடம்பெறுகின்ற மூன்று நாள் அமர்வில்,...
  • சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் எவர் வெற்றி பெற்றாலும் தமிழின அழிப்புத் தொடரும் ! சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் எவர் வெற்றி பெற்றாலும் தமிழின அழிப்பு தொடரவே செய்யும் என தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், சிறிலங்காவின் அதிபர் தேர்தல் தொடர்பிலான தமது நிலைப்பாட்டை நா.தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள்  முன்வைத்துள்ளார். சிறிலங்காவின் தேர்தல் தொடர்பில்...

மாவீரர்களின் இலட்சியக் கனவோடு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு தொடங்கியது !

novembre 29
11:07 2019

தாயகம், தேசியம், அரசியல் இறையாண்மை என ஈழத்தமிழ் மக்களின் அரசியல் பெருவிருப்பின் ஜனநாயக வடிவமாக திகழும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரவை அமர்வு சுவிஸ்லாந்து நாட்டில் கூடியது.

நொவெம்பர் 29,30, டிசெம்பர் 1ம் திகிதி வரை இடம்பெறுகின்ற மூன்று நாள் அமர்வில், அமெரிக்கா, கனடா, ஓஸ்றேலியா, பிரான்சு,ஜேர்மனி, பிரித்தானியா உட்பட தமிழ்நாட்டில் இருந்து நா.தமிழீழ அரசாங்கத்தின் அரசவைப் பிரதிநிதிகள் பலரும் பங்கெடுத்துள்ளனர். சமவேளை பிரித்தானியாவில் இருந்தும் காணொளிவழியே உறுப்பினர்கள் பங்கெடுக்கின்றனர்.

தமிழீழத்தை வென்றடைவதற்கான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கை
இந்திய பெருங்கடல் இந்தோ-பசுபிக் புவிசார் அரசியலும் தமிழர்களுக்கான வாய்ப்புக்களும்…
தமிழீழத் தேசக் கட்டுமானம்

தமிழர் தலைவதி தமிழர் கையில் – பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம் ஆகிய தொனிப்பொருட்களை மையப்படுத்தி இந்த அமர்வு இடம்பெறுகின்றது.

தொடக்கநிகழ்வில் சுதந்திரத்துக்கான போராடி வரும் கத்தலோனியாவில் இருந்து அவர்கள் சிறப்பு அதிதியாக Jurdi Vilamova கலந்து கொண்டிருந்தார். சுவிசில் சமூக-அரசியல் செயற்பாட்டுத்தளத்தில் ஈடுபடுகின்ற பிரதிநிதிகள் பலரும் பங்கெடுத்துள்ளனர்.

இதேவேளை அமைச்சுக்களின் செயற்பாட்டு அறிக்கை, கருத்தாடல், தீர்மானங்கள் என உட்பட பலவிடயங்கள் இவ்மூன்று நாள் அமர்வுகளில் உரையாடப்பட இருக்கின்றன.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

DCIM100GOPROGOPR0121.JPG