நாதம் செய்திகள்

மெல்பேர்ண்​ வாழ் மக்களால் உணர்பூர்வமா​க நினைவுகூரப்​பட்ட தமிழினப் படுகொலை நாள்
சிங்கள அரச பயங்கரவாதத்தினால் படுகொலை செய்யப்பட்ட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்மக்களை நினைவுகூரும் தமிழினப்படுகொலை நாள் நிகழ்வு, அவுஸ்திரேலியா மெல்பேர்ணில் இன்று உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டது.

மெல்பேர்ண் நகரின் மத்தியில் அமைந்துள்ள State Library முன்றலில் இன்று மாலை 5.00மணி முதல் 6.30 மணி வரை இடம்பெற்ற இந்த நிகழ்வில், மெல்பேர்ண் வாழ் தமிழ் மக்களும், தமிழீழத்துக்கு ஆதரவான வேற்றின மக்களும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில், 2010ஆம் ஆண்டின் Australian of The Year விருதுபெற்ற பேராசிரியர் Patrick McGorry மற்றும் அவுஸ்திரேலியச் செனற் சபையின் உறுப்பினரான John Madigan ஆகியோர் சிறப்புப் பேச்சாளர்களாகக் கலந்துகொண்டு உரையாற்றினர்.

அவுஸ்திரேலியாவுக்கு புதிதாக வந்து புகலிடம் கோருவோருடனான தனது உறவைப்பற்றிக் குறிப்பிட்ட பேராசிரியர் Patrick McGorry, தமிழ் மக்கள் எவ்வளவு துயரங்களை அனுபவித்துள்ளார்கள் என்பதை புரிந்துகொள்ள முடிவதாகக் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில், உரையாற்றிய செனற்றர் John Madigan, சிறிலங்காவில் ஐ.நாவின் மேற்பார்வையுடனான ஒரு சர்வதேச விசாரணையை வலியுறுத்தினார். இந்நிகழ்வின் உரைகளில் இறுதியாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளில் ஒருவரான டொமினிக் சந்தியாப்பிள்ளை உரையாற்றினார்

இறுதியில் தமிழ் மக்களும் நிகழ்வில் கலந்துகொண்ட வேற்றின மக்களும் உறுதிமொழி எடுத்தனர்.

தமிழீழத் தாயகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
சிறிலங்கா இராணுவத்தின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் தமிழீழத் தாயகத்தில் முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

வட தமிழீழத்தின் யாழ்,பல்கலைக்கழகத்தில் – பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் காலை 10.40 மணியளவில் ஆரம்பமான இந்நிகழ்வு 12.00 மணிவரை தொடர்ச்சியாக நடைபெற்றுள்ளது.

விடுதலைப் போரில் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட பொது மக்களுக்கும் தமிழீழம் மலர வேண்டும் என்பததை இலட்சியமாக கொண்டு தம் இன்னுயிரை ஆகுதியாக்கி மாவீரர்களுக்கும் மெழுகு வர்த்திகள் ஏற்றப்பட்டு அஞ்சலிகள் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் அனைத்துப் பீட மாணவர்களும் கலந்து கொண்டு தமது கருத்துக்களை வழங்கினார்கள்.

இறுதிக் கட்ட யுத்தத்தில் கொத்துக் கொத்தாக மடிந்த தம் உறவுகளுக்காக தமது அஞ்சலி நிகழ்வை,சிறீலங்கா இராணுவ புலனாய்வாளர்களின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் இன்று காலை பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் தாக்கப்பட்டமைக்கு மத்தியிலும் பல்கலை மாணவர்கள் நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள் பலர் தமிழர் தாயகத்தில் பரவலாக முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டு நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுத்துள்ளனர்.

<object width="600" height="400"><param name="allowfullscreen" value="true" /><param name="allowscriptaccess" value="always" /><param name="movie" value="http://www.youtube.com/v/hRyLPsMWEYM&autoplay=0&loop=0&rel=0" /><param name="wmode" value="transparent"><embed src="http://www.youtube.com/v/hRyLPsMWEYM&autoplay=0&loop=0&rel=0" type="application/x-shockwave-flash" wmode="transparent" allowfullscreen="true" allowscriptaccess="always" width="600" height="400"></embed></object>

தமிழீழ அரசாங்கத்தின் நாதம் வானோசை

தமிழீழ அரசாங்கத்தின் நாதம் வானோசை இலங்கை வான் பரப்பில் ஒலித்தது !
தமிழீழத் தாயகம் நோக்கிய நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறவுப்பாலம் தனது முதலாது ஒலிபரப்பினைத் தொடங்கியது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தும் மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளான இன்று இலங்கையின் வான்பரப்புக்குள் நாதம் வானோசை உள்நுழைந்தது.

இச்சேவையினைத் தடுப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் கடும் முயற்ச்சிகளை மேற்கொண்டிருந்த போதும் சீரான முறையில் நாதம் வானோசை ஒலித்தது.

இலங்கை நேரம் இரவு 8:30 மணிக்கு சிற்றலையூடாக அலைவரிசை (short-wave) 12  250 mhz ல் ஒலித்துள்ளது.

இந்த ஒலிபரப்பு தமிழகம் மலேசியா சிங்கப்பூர் உட்பட ஆசிய பிராந்தியத்தில் இதனைக் கேட்ககூடியதாக இருந்தது.

தாயகம் – தேசியம் – தன்னாட்சியுரிமை எனும் ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாசையின் சனநாயகப் போராட்ட வடிவமாகவுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் – புலத்துக்கும் நிலத்துக்குமான உறவுப்பாலமாகவும் உலகத் தமிழர்களின் ஈழத்துக்கான குரலை காவிவரும் உணர்வுப்பாலமாகவும் ,வ்வானலை ஒலிபரப்பு அமையவுள்ளதென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்தி : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் – உலகத் தமிழர் பேரவை கூட்டறிக்கை
முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டினை உலகத் தமிழினம் நினைவேந்தி வரும் இவ்வேளையில் , சுதந்திர தமிழீழம் நோக்கிய ஈழத்தமிழர்களின் நியாயமான போராட்டத்தினை வென்றெடுப்பதற்குரிய, ஒருங்கிணைந்த செயற்பாடுகளுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் , உலகத் தமிழர் பேரவையும் சில உடன்பாடுகளை எட்டியுள்ளதாக நா.த.அரசாங்கத்தின் செயலகம் தெரிவித்துள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் மற்றும் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வண. கலாநிதி எஸ்.ஜே.இம்மானுவல் அடிகள்

ஆகியோர் , இவ்விடயம் தொடர்பில் கூட்டறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளனர்.

ஒருங்கிணைந்த செயற்பாடுகள் குறித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினதும் உலகத் தமிழர் பேரவையினதும் பிரதிநிதிகள் கடந்த 13, 14 ஆம் திகதிகளில் அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்க்கோ நகரில் ஒன்றுகூடி, பல விடயங்களை விரிவாக ஆராய்ந்ததோடு சில உடன்பாடுகளையும் எட்டியுள்ளனர் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையின் முழுவிபரம் :

முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நடைபெற்று முடிந்து இன்றுடன் ஆண்டுகள் மூன்றாகின்றன. இத்தினத்தில் முள்ளிவாய்க்கால் படுகொலையின் போதும் தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டக்காலத்திலும் கொன்றொழிக்கப்பட்ட நமது மக்களை நாம் ஆழ்ந்த கவலையுடனும் வணக்கத்துடனும் பொறுப்புடனும் நினைவு கூருகின்றோம்.

அனைத்துலகச் சட்டங்கள் நியமங்களையெல்லாம் குழி தோண்டிப் புதைத்தவாறு பயங்கவாதத்துக்கெதிரான போர் என்ற போர்வையில் அநாகரீக முறையில் பல்லாயிரக்கணக்கான பொது மக்களை சிறிலங்கா அரசு கொடிய முறையில் கொன்றொழித்தது.

ஐக்கிய நாடுகள் சபை உள்ளடங்கலான அனைத்துலக சமூகம் இப்படுகொலைகளைத் தடுத்து நிறுத்த உருப்படியான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை என்பது ஒரு வரலாற்றுப்பதிவாகியிருக்கிறது.

நமது மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதி கிடைத்தாக வேண்டும். இக் குற்றங்களைப் புரிந்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டுத் தண்டிக்;கப்பட வேண்டும். ஈழத் தமிழ் மக்களுக்கு நிகழ்ந்த இப் பெரும் கொடுமை உலகில் எந்த மக்களுக்கும் எதிர்காலத்தில் நிகழாது காக்கப்படவும் வேண்டும்.

இதனால் நீதி கோரும் நமது போராட்டம் ஈழத் தமிழ் மக்களுக்கானது மட்டுமல்ல. உலகின்

எந்தவொரு அரசும் மக்கள் மீது இவ்வகை மிருகத் தனமான வன்முறையினைப் பயன்படுத்துவதற்கு எல்லைகள் விதிக்கப் பட்டாக வேண்டும் என்பதற்கான போராட்டமாகவும் இது அமைகிறது.

சிறிலங்கா அரசு புரிந்த இனப்படுகொலை தொடர்பான ஏராளமான ஆதாரங்கள் எமது கைகளிலும் அனைத்துலக சமூகத்தின் கைகளிலும் இருக்கின்றன. சிறிலங்கா அரசு தன் மீதான போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை ஒரு பொழுதும் உள்நாட்டில் உரியமுறையில் செய்யப்போவதில்லை,

செய்யவும் முடியாது என்பதும் அனைத்துலக சமூகம் புரிந்து கொள்ள முடியாத விடயம் அல்ல. அதே சமயத்தில், வெளியுலகம் தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் எமது இனத்தையும் தேசத்தையும்  அழிக்கும் நடவடிக்கைளை அரசு வேகப்படுத்தி வருகிறது. இதனால் காலம் கடத்தாது, அனைத்துலக சுயாதீன விசாரணைக்கான நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் விரைவில் முன்னெடுக்க வேண்டும்.

இத்தனை இன்னல்களின் மத்தியிலும் சிக்கியிருக்கும் நமது மக்கள்; அங்கே கௌரவத்துடன் வாழத் துடிக்கின்றனர். அவர்களைப் பாதுகாப்பதற்கு ஒரு அனைத்துலகப் பாதுகாப்புப் பொறிமுறையை ஏற்படுத்துவதும் மிகவும் அவசியமாகிறது.

ஈழத் தாயகமும் – புலமும் – தமிழகமும்  புரிந்துணர்வுடன் கூடிய செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டிய இந்த நேரத்தில் உலகத் தமிழ் மக்களினதும் உலகில் நீதிக்காய்க் குரல் தரக்கூடிய மக்கள் சமூகத்தின் ஆதரவுடனும் அவற்றினை நாம் முன்னெடுக்கும்; போது, அனைத்துலக சமூகம் நமது நீதிக்கான குரலை செவிமடுக்கும் சூழலை உருவாக்க முடியும்.

தற்போதய சிறிலங்கா அரசாங்கத்தின் அதிகார மமதையும் ஆணவப்போக்கும் அனைத்துலக சமூகத்தின் வெறுப்பினைச் சம்பாதித்து வருகின்றன. இது நமக்கு வாய்ப்பான சூழல் உருவாகும் நிலைமைகளைத் தோற்றுவித்தும் வருகிறது. அதே சமயத்தில் முள்ளிவாய்க்காலின் பின் சர்வதேச மன நிலையிலும் பார்வையிலும் அணுகு முறையிலும் மாற்றங்கள் தோன்றுகின்றன. இவைகளை எமது கவனத்திற்கொண்டு, நாம் விவேகத்துடனும் அரசியல் ஞானத்துடனும் எமக்கு ஆதாயமாக்கிச் செயற்பட வேண்டும். நமக்கிடையிலேயான புரிந்துணர்வையும் கூட்டுச் செயற்பாடுகளையும் வலுப்படுத்தவும் வேண்டும்.

இந்நோக்குடன் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினதும் உலகத் தமிழர் பேரவையினதும் பிரதிநிதிகள் இம் மாதம் 13, 14 ஆம் திகதிகளில் அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்க்கோ நகரில் ஒன்றுகூடி, ஒருங்கிணைந்த செயற்பாடுகள் தொடர்பான பல விடயங்களை விரிவாக ஆராய்ந்ததோடு சில உடன்பாடுகளையும் எட்டியுள்ளனர் என்பதனை நமது மக்களுக்கு அறியத் தருகிறோம்.

முள்ளிவாய்க்கால் நினைவுகளுடன் நாம் முன்னெடுக்கும் நமது மூன்றாம் கட்ட விடுதலைப்பயணத்தில் இம் முயற்சி ஒரு முக்கியமான ஒரு மைல்கல்லாகும். உலகத் தமிழர் பேரவை மேற்கொண்டு பல்வேறு புலம்பெயர் தமிழமைப்புக்களுடனும் இலங்கையில் தமிழ்பேசும் மக்கள் பிரதிநிதிகளுடனும் இவ்வகை பொதுவான புரிந்துணர்வு நோக்கி செயற்படவுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உலகத் தமிழ் மக்களிடையே, அதுவும் குறிப்பாகத் தமிழக உறவுகளிடையேயும் மற்றும் சர்வதேச மக்கள் சமூகத்திடையேயும் தமது வலுவைத் திரட்டி வருகிறது.

முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நினைவுகூரும் இன்றைய தினத்திலே நமது மக்களின் விடுதலை நோக்கிய பயணம் ஓய்வின்றித் தொடரும் என்ற தெளிவான செய்தியினை நாம் கூட்டிணைந்து வெளிப்படுத்த விரும்புகிறோம்.

இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் மற்றும் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வண. கலாநிதி எஸ்.ஜே.இம்மானுவல் அடிகள் ஆகியோரது கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

லண்டன் – பாரிஸ் வீதிகளில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை பரப்புரை ஊர்திகள் !
முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டினை நினைவேந்தும் வகையில் லண்டன் –  பாரிஸ் நகர வீதிகளில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை பரப்புரை ஊர்திகள் உலாவந்த வண்ணமுள்ளன.

முள்ளிவாய்க்கால் இன்படுகொலையினை வெளிப்படுத்தியும், ஈழத்தமிழர்களின் நியாயமான உரிமைப் போராட்டத்தினை முன்னிறுத்தியும் இவ்வூர்திகள் உலாவருகின்றன.

பாரிஸ் நகரின் பல பாகங்களெங்கும் நகரும் ஊர்தியினை பிரான்ஸ்-தமிழர் நடுவம் ஏற்பாடு செய்துள்ளது.

இதேவேளை லண்டன் வீதிகளில் உலாவரும் பரப்புரை ஊர்த்தியானது மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளென்ற வாசகங்களுடன் நகர்ந்து வருகின்றது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளின் ஒருங்கிணைப்பில் உலா வரும் இவ்வூர்தியின் உள்ளே, பரப்புரை கையேடுகள் – துண்டுப்பிரசுரங்கள் என மக்கள் உள்சென்று அறிந்து கொள்ளும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

புலத்துக்கும் நிலத்துக்கும் உறவுப்பாலம் அமைப்போம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தமிழீழத் தாயகம் நோக்கிய சிற்றலையூடான (short-wave)  வானொலி ஒலிபரப்பு 12  250 mhz எனும் அலைவரிசையூடாக ஒலிக்கவுள்ளதென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தகவற்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தகவற்துறை அமைச்சர் சாம் சங்கரவசிவம் அவர்கள் அறிக்கையொன்றினை இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ளார்.

மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளான வெள்ளிக்கிழமை இலங்கை நேரம் இரவு 8:30 மணிக்கு முதற் சிறப்பு ஒலிபரப்பு ஒலிக்கவுள்ளதாவும் தமிழ்நாடு மலேசியா சிங்கப்பூர் உட்பட ஆசிய பிராந்தியத்தில இந்த ஒலிபரப்பினை செவிமடுக்கலாம்என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையின் முழு விபரம் :

உலகத் தமிழ் உறவுகளுக்கு வணக்கம்

முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டினை உலகத் தமிழினம் நினைவேந்தி வரும் இவ்வேளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தகவற்துறை அமைச்சகம் தமிழீழத் தாயகம் நோக்கிய சிற்றலையூடான வானொலி ஒலிபரப்பினை தொடங்கின்றது.

மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளான வெள்ளிக்கிழமை – சிற்றலை (short-wave) 12  250 mhz  அலைவரிசையூடாக இலங்கை நேரம் இரவு 8:30க்கு முதற் சிறப்பு ஒலிப்பரப்பு வானலைகளில் ஒலிக்கவுள்ளது.

தமிழீழம் – சிறிலங்கா – தமிழ்நாடு – இந்தியா – மலேசியா  சிங்கப்பூர் என ஆசிய பிராந்தியத்தில் இந்த ஒலிபரப்பினை செவிமடுக்க முடியும்.

மே 2009ல் தமிழீழ தாயகத்தினை வல்வளைப்புச் செய்துள்ள சிங்கள பௌத்த பேரினவாத சிறிலங்கா அரசு தமிழர்களின் சுதந்திர தமிழீழத் தாகத்தை முடக்கிவிட்டதாக வெற்றிமுரசு கொட்டி நிற்கின்றது.

இலங்கைத்தீவில் தமிழர்களுக்கான அரசியல் வெளி முற்றாக அற்றுப்போயுள்ள நிலையில் தமிழீழத் தாயக மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்துக்கான வெளி இலங்கைத் தீவுக்கு வெளியே தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

தாயகம் – தேசியம் – தன்னாட்சியுரிமை எனும் ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாசையின் சனநாயகப் போராட்ட வடிவமாகவுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் – புலத்துக்கும் நிலத்துக்குமான உறவுப்பாலமாகவும்  உலகத் தமிழர்களின் ஈழத்துக்கான குரலை காவிவரும் உணர்வுப்பாலமாகவும் இவ்வானலை ஒலிபரப்பு அமையவுள்ளது.

இதேவேளை அமெரிக்கா – ஐரோப்பிய – அவுஸ்றேலிய உறவுகள் இணையத்தளங்கள் வானொலிகள் ஊடக இந்த ஒலிப்பினை கேட்டுக் கொள்ளவதற்குரிய ஏற்பாடுகள் செய்யபப்பட்டு வருகின்றன.

தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்

இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தில் தகவற்துறை அமைச்சர் சாம் சங்கரசிவம் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நோர்மன்டி கான் பல்கலைக்கழகத்தில் ஒலித்த இலங்கையின் இறுதி யுத்த சாட்சியங்களின் குரல்கள் !
முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டினை உலகத் தமிழினம் நினைவேந்தி வரும் நிலையில் சிங்கள பௌத்த பேரினவாத அரசின் தமிழினஅழிப்புக் கொடுமைகளின் நேரடிச்சாட்சியங்களின் குரல்கள் பிரான்ஸ் – நோர்மன்டிக் கோன் பல்கலைக்கழகத்தில் ஒலித்துள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரான்சின் வட பிராந்தியத்திற்கான மக்கள் பிரதிநிதி வள்ளுவன் பாக்கியசோதி ஒருங்கிணைப்பில் இரண்டாம் உலகப் போரின் வரலாற்றுச் சாட்சியமாக விளங்கும் வட பிரான்சின் நோர்மன்டி- கோன் பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கொன்று 15-05-2012 செவ்வாய்கிழமையன்று இடம்பெற்றிருந்தது.

இந்தக் கருத்தரங்கிலேயே போரின் நேரடிச் சாட்சியங்களாக , போராளிகள் மற்றும் பொதுமக்கள், தமது நேரடி அனுபவங்களை அங்கு பகிர்ந்துகொண்டனர்.

சொலிடாரித்தே தமிழீழம் என்ற பிரெஞ்சு அமைப்பு மற்றும் ஆகிய எப்.எஸ்.ஈ. என்ற மாணவர் ஒன்றியம் இக்கருத்தரங்கிற்கு  உறுதுணை வழங்க பிரான்ஸ் தமிழர் நடுவம் தனது பூரண ஒத்துழைப்பை வழங்கியிருந்தது.

எதிர்வரும் நாடாளுமன்றத ;தேர்தலில் அத்தொகுதியில் இடதுசாரிக்கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ள சோபியா லியா அவர்களின் இக்கருத்தரங்கினை நெறிப்படுத்தியிருந்தார்.

இக்கருத்தரங்கில் பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள், சமூக அரசியல் செயற்பாட்டாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் என பல பிரென்சு நாட்டவர்கள் பங்கெடுத்திருந்தனர்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உள்துறை அமைச்சர் நாகலிங்கம் பாலசந்திரன் இளையோர் பிரதிநிதி மகிந்தன் சுப்பிரமணிம் மற்றும் தகவற்துறை துணை அமைச்சர் சுதர்சன் சிவகுருநாதன் ஆகியோரும் பங்கெடுத்து கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருந்தனர்.

கருத்தரங்கில் போரின் நேரடிச் சாட்டிசியங்களின் கருத்துக்களுக்கு முன்னதாக  சனல் -4  தொலைக்காட்சியின் இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்படம் திரையிடப்பட்டது.

துமிழர்கள் மீதான சிறிலங்காவின் இனவழிப்பின் காட்சிகளை திரையில் கண்ட அத்தனை விழிகளும் துயரம் பொங்க விம்மி அழுத காட்சிகள் அரங்கில் வேறொரு பரிமாணத்தைத் தோற்றுவித்தது.

தொடர்ந்து இறுதிக் கணம்வரை அங்கிருந்து, பின் வெளியேறிவந்த போராளிகள் மற்றும் பொதுமக்களின் அனுபவங்களின் கருத்துக்களுக்கான களம் திறக்கப்பட்டது.

பல்லைக்கழக மாணவர்கள், ஊடகவியலாளர்கள், கேள்விகளைத் தொடுத்து, அவர்களின் பதில்களைப் பதிவுசெய்தனர்.

பிரெஞ்சு வானொலிகள் இரண்டு, மற்றும் பிரெஞ்சுப் பத்திரிகையாளர்கள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.

சொலிடாரித்தே தமிழீழம், நாடுகடந்த தமிழீழம், தமிழர் நடுவம் ஆகிய அமைப்புக்களின் பிரதிநிதிகள், தமது கருத்துக்களையும், தமிழ்மக்களின் தேவைகளையும் அங்கு வந்திருந்தவர்கள் மத்தியில் முன்வைத்தனர்.

சர்வதேசத்தை முற்றாக அலட்சியப்படுத்திவிட்டு, சர்வதேச சட்டங்கள் மனிதநேய விழுமியங்களை முற்றாக நிராகரித்துவிட்டு, இந்த நூற்றாண்டில் மிகக்கொடூரமான இப்படுகொலையை நடத்திய சிறீலங்கா அரசு, அனைத்துலக நீதிமன்றத்தின் முன்நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தமிழர்கள் தொடர்ந்து இனப்படுகொலைக்கு உள்ளாகின்றார்கள் என்ற பேருண்மை ஏற்றுக்கொள்ளப்பட்டு, அம்மக்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படவேண்டும் என்றும், இதற்காக பிரெஞ்சு அரசாங்கம் முன்னின்று செயற்பட்டு, சர்வதேச சமூகத்தின் கருத்தை இதன்பால் திரட்டவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இன்றும், சிறைக்கூடக்களிலும் தடுப்புமுகாம்களிலும் அடைக்கப்பட்டு வாடும் தமிழ்மக்களின் நிலைகுறித்து எடுத்துவிளக்கிய போராளிகள் அவர்களின் விடுதலைக்கு சர்வதேச சமூகம் சிறீலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் விதத்தில் பிரெஞ்சு அரசாங்கம் ஆவன செய்யவேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நோர்மன்டியில் கான் பல்கலைக்கழகத்தில், முதல்முதலாக இந்த நிகழ்வு நடைபெற்றிருப்பதை, நன்றியுணர்வோடு சுட்டிக்காட்டிய தமிழர்நடுவப் பிரதிநிதி, தமிழ்மக்களின் நிலையை, இந்நிகழ்வினூடாக ஓரளவேனும் புரிந்தகொண்டிருக்கும் நீங்கள் அந்த மக்களுக்கு எவ்வகையில் உதவிசெய்யலாம் என கேட்டிருந்தார்.

தமிழ்மக்களிற்கு வரலாறு நெடுகிலும் நடத்தப்பட்ட பெருங்கொடுமைகள் குறித்து தற்போதுதான் தாம் அறிந்துகொள்வதாகவும், தமிழ்மக்களின் உணர்வுகளோடு தாம் இணைந்திருப்பதாகவும், தமிழ்மக்களால் மேற்கொள்ளப்படும் போராட்டங்களில் தாம் நேரடியாகக் கலந்துகொண்டு, தமிழ்மக்களின் கரங்களைப் பலப்படுத்துவோம் என்றும் அங்கிருந்த அனைவரும் உறுதிபடத் தெரிவித்தனர்.

ஆர்மேனிய மக்கள் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டார்கள் என்பதை ஏற்றுக்கொண்டு அறிவித்த பிரேஞ்சு அரசாங்கம் சிறீலங்கா அரசால் தமிழ்மக்கள் இனப்படுகொலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர் என்பதை ஏற்றுக்கொண்டு அறிவிக்கவேண்டும் என்னும் கோரிக்கையை முன்வைத்து கையொப்பப் போராட்டம் நடத்திவரும் நாடுகடந்த தமிழீழ அரசின் கையொப்பப் போராட்ட படிவங்களில்,  அங்கு வருகைதந்திருந்த அனைவரும் கையொப்பம் இட்டு தமது ஆதரவை வழங்கியிருந்தனர்.

நிகழ்வு, இரவு 23.30 வரையும் நடைபெற்றது. வந்திருந்த அனைவரும் பொறுமையுடனும், ஆர்வமாகவும், இறுதிவரை நிகழ்வில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை  இக்கருத்தரங்கிற்கு முன்னதாக பிற்பகல் ஐந்து மணிக்கு நோர்மொண்டி பிராந்திய வானொலியொன்று போராளிகளுடனான கேள்வி பதில் நிகழ்ச்சியினை, நேரடியாக ஒலிபரப்புச் செய்திருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.

மே-18 முதல் தமிழீழம் நோக்கிய சிற்றலை வானலை ஒலிபரப்பினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடங்குகின்றது !
தமிழீழத் தேசிய துக்க நாளான மே-18 முதல், தமிழீழத் தாயகம் நோக்கிய, வானலை ஒலிபரப்பொன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடங்குகின்றது.

புலத்துக்கும் நிலத்துக்குமான உறவுப்பாலமாக நாதம்ஒலிபரப்பென, சிற்றலையூடாக (Shortwave) இந்த வானலை ஒலிபரப்பு அமையவுள்ளது.

தமிழீழம், சிறிலங்கா, தமிழ்நாடு, மலேசியா, சிங்கப்பூர் உட்பட ஆசிய பரப்பெங்கும் இது ஒலிக்கவுள்ளது.

மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளான வெள்ளிக்கிழமை, இதன் 1 மணி நேர முதற் சிறப்பு ஒலிபரப்பு அமையவுள்ளது.

சிறிலங்காவிக் தமிழின அழிப்பின், கொடிய போரின் வலிகளைச் சுமந்து நிற்கும் தாயக மக்களுக்கு, ஒத்தடமாகவும் நம்பிக்கையூட்டுவதாகவும் நோக்காக கொண்டு இதன் ஒலிபரப்பு அமையுமென, நா.த.அரசாங்கத்தின் துணை அமைச்சர் சுதர்சன் சிவகுருநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தமிழ்நாடு, மலேசியா ,சிங்கப்பூர் என உலகத் தமிழர்களையும் ஒருங்கிணைக்கும் உணர்வுப்பாலமாகவும் இது அமையுமென அவர் தெரிவித்துள்ளார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை முடக்க, பலவழிகளிலும் செயற்பாடுகளை மேற்கொண்டு வரும் சிறிலங்கா அரசுக்கு, இலங்கையின் வான்பரப்பூடாக தமிழீழ மக்களை எட்டவுள்ள தமிழீழ அரசாங்கத்தின் வானலை ஒலிபரப்பு , கடும் சீற்றத்தினைக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.

மே-18ல் தமிழீழ தேசிய துக்க நாளில் ஐ.நாவின் முன்னாள் அணிதிரளத் தயாராகும் அமெரிக்க வாழ் தமிழர்கள் ! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
அமெரிக்காவின் நியூ யோர்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளில் வட அமெரிக்கத் தமிழர்கள் அணிதிரள்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மே-18 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு பேரணியாக தொடங்கி ஐ.நாவுக்கு முன்னாள்

நினைவெழுர்ச்சி நிகழ்வாக இது நிறைவுபெறவுள்ளது. (Procession to the Time Square / 860 2nd avenue, New York, NY 10017 ( E 47 st between 1 and 2 ave)

இந்நிகழ்வில் நா.த.அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் கலந்து கொண்டு தமிழீழத் தேசிய துக்க நாள் சிறப்புரையினை வழங்கவுள்ளார்.

இப்பெரு நிகழ்வில் அமெரிக்க தமிழ் உறவுகள் மட்டுமல்ல கனடாவின் மொன்றியல் தமிழ் உறவுகளும் இதில் பங்கெடுக்கவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கள பௌத்த பேரினாவ அரசினால் ஈழத்தமிழனத்தின் மீது நடந்தேறிய இனப்படுகொலையினை வெளிப்படுத்தும் வகையில் ஒளிப்படக் கண்காட்சி மற்றும் துண்டுப்பிரசுரங்கள் பரப்புரைகளும் இடம்பெறவுள்ளன.

மேலதிக விபரங்களை 609 658 2847 / 917 744 66733 / 514927 5940 / 514 995 6000 குறித்த இந்த தொடர்பிலக்கம் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.